http://www.expressindia.com/fullstory.php?newsid=14227
http://www.ts-adyar.org/magazine/wakeupindia/december_2002/editorial.htm
வலியனால் வறிஞனுக்கு வழுவென்றால்
தடுக்க முயலாத சட்டம்,
வறிஞனால் வலியனுக்கு பழுதென்றால்
ஒடுக்க பாயும் சட்டம்,
அரசியல் கயவர்களை
துளை வழியே, சாமர்த்யாமாய்
தப்பிக்க விட்டு விட்டு
காசுள்ள காதகர்கள்,
விலை பேசப்படும் சாட்சிகளால்
விடுதலையாக விட்டு விட்டு,
உணர்ச்சி கொந்தளிப்பில்,
உத்தேசமின்றி ஊழ்புரிந்த்தோரை
உற்சாகமாய் தண்டிப்பதனால்,
நீதியும் தர்மமும்
நீதிமன்றங்கள் மூலம், கிலமின்றி
நிலைநாட்டியதாய் கொக்கரிக்கும்.
வடிவில் நேராயிருந்தும்,வாள் வீச்சு
இதயத்தில் இடம் பிடித்து கொல்லும்
வளைந்த வடிவிலிருன்ந்தும்,யாழ் வீச்சு
இதயத்தில் இடம் பிடித்து கொள்ளும்
ஏட்டு சாசனத்திற்கு
நேர்மையாய் இருக்கும் நீதிக்கணவான்களே,
மனிதத்திற்கு
வளைந்து கொடுத்தால், சட்டத்தின்
புனிதத்திற்கு புரையேறுமா என்ன?
தீயால் வெந்த நாவில்
தீயம் சுவைக்க வைத்தாலும்
தீச்சுவை தானே தெரியும்.
அரையடிநிலம், பங்கில்
அதிகம் பெற்றதால்,
அண்ணன் மீது, தம்பி
வழக்காடி ஜெயித்து, பின்
வக்கீலின் கட்டணத்தை, அந்நிலங்கள்
விற்று விட்டு கட்டுவானாம்.
கூடிபேசுகையில், தீரக்கூடிய விஷயங்களை,
கூண்டில் ஏறி வாதிடும்போது
குரங்கு கையில் அப்பமாய்,
கொண்டவனிடமும் நில்லாது
கேட்டவனுக்கும் இல்லாதுபோகும்
வாய்தா வாய்தா என
வழக்குகள் தள்ளி போக,
வாதி, பிரதிவாதி பல
சமயம் இறந்தும் கூட,
வக்கீலும் நீதிபதியும், சில
சமயம் மரித்தும் கூட,
வாழும் வழக்குகள் எத்தனை எத்தனை?
மனிதம் மீது நம்பிக்கை குறைந்ததால்,நீதி
மன்றங்கள் பிறந்ததோ?
மகேசன் மீது நம்பிக்கை குறைந்ததால்,
மதங்கள் பிறந்ததோ?
மூன்று நாளாய் பட்டினியிருப்பவன்,
மூச்சு விடக்கூட திரணற்றவன்,
முக்தியடையச் சொல்லும்
பிரசாரத்தை கேட்பானா?
முன்னறையில் தயாராகும்
பிரசாதத்தை கேட்பானா?
மதம் சங்கடமான சம்பிரதாயமானதால்
ம்ந்திரம்,மொழி வளர்க்கும் பயிர்ச்சியாச்சோ?
சன்மார்கம், செல்வம் கொழிக்கும் வியாபாரமானதால்
பக்தி, பகட்டால் ஈர்க்கும் நிறுவனமாச்சோ?
ஆதலால்
அண்டை மனிதரின் துன்பம் தீர
ஆக்கம் கூறிய காலம் மலையேறி போச்சோ?
அண்ணல் காந்தியும், காமராஜரும்
அறிஞர் கலாமும், அம்பேத்கரும்
அன்னை தெரசாவும்,பெசண்டும்
அண்டிய மதத்தால்
அவர்கள் உன்னதம் பெறவில்லை.
கடவுள் பெயரை சொல்லி
அங்கொருவன்
கண்டை வேட்டி அபகரித்தால்,
தலைவன் எனக் கூறி
இன்னொருவன்
துண்டு கோவனம் களவாடுவான்.
அடிப்படை வசதிகளான
மருத்துவம், கல்வி
மின்சாரம், தண்ணீரை
தனியாருக்கு அரசாங்கம்
தாரை வார்த்திட்டு,
மதுவகை கொள்முதலுக்கு
மாநிலம் முழுதும் கடைதிறக்கும்,
மாபெரும் தொண்டுடக்கு, மேடையில்
மார்தட்டி கொள்ளும்.
குடித்து குடல் வேக ஒருவன்
கொடுக்கும் காசில்தான். அவன்
கட்டை வேகும் இடத்திற்கே
கட்டிடம் கட்டி கொடுக்கும்.
அரிசியும் அடுப்பும்
இலவசமாய் கொடுத்துவிட்டு,
அரசாங்கம்
இரண்டு ரூபாய் கொடுத்தே
பொதுக்கழிப்பிறை பயன்படுத்த சொல்லும்.
மூன்று நாளுக்கொருமுறை,
மின்விளக்கெரியும் ஊரில்,
இலவசமாய் தொலைக்காட்சி பெட்டி தந்து
இரண்டு மடங்காய், மின் கட்டணம் வசூலிக்கும்.
தெரிந்து புரிந்தவன் வருந்தவேண்டும்,
தெரியாது புரிந்தவன் திருந்தவேண்டும் என
சமூகம்விட்டு தனிமை படுத்தபட்டு
சிறையில் அடைக்கபடும் கைதிகளுக்கு,
ஆட்சிகள் மாறும்போது
அரசியல்வாதியும், அதிகாரியும்
அடைக்கபடும் விடுதியாவதால், சிறைச்சாலையில்
அதிநவீன வசதிகயும்
அருசுவை உணவுமி ருக்கும்.
ஆதி திராவிட மாணவர் விடுதியிலோ
அரவமும், தேளும் நடமாடும்.
ஏழை மாணவரின் மதிய உணவில்
எலியும், பல்லியும், ஊறி உயிர்விடும்.
ரம்மிமான சூழலில் அமைந்து, வசதிகள்
ரசித்து வாழும் சுதந்திரமான சிறைகளால்,
கூடாது குற்றங்கள் என்ற
சாமான்ய மக்களின் எண்ணம்
கூடாது குறையாதா?
No comments:
Post a Comment