Thursday, November 09, 2006

என் வீட்டில் நீ



புத்தர் அமர்ந்து ஞானம் பெற்றதால்
புனிதம் அடைந்த போதி மரம்போல், நீ
தங்கி சென்ற பின்னே , என் இல்லம்
தீட்சை பெற்றது பெண்ணே

எதிர்புறம் பின்புறம்
இடபுறம் வலபுறம்
மேல்புறம் கீழ்புறம்
எப்புறம் திரும்பினாலும்,
அருகில் நீ இருந்தவரை என்
அரண்மனை முழுதும்
அந்தபுரமானதே தோழி

எந்த பக்கம் திரும்பினாலும்
என் வீட்டில் இப்போது
எஞ்சியிருப்பது யாவும்
வஞ்சி உன் பதிவுகள்

நீ வந்து போன பின்னே
என் வீட்டில் நானே
விருந்தாளியானேன்

வண்டை தேடி வந்த
வாச மலர் செண்டே

என் தலையனையில் ஒளிந்த
உன் தலை மயிர் இழைகள்

வாடிபோனதால் நீ
வீசி எறிந்தது என்
கவிகளுக்கு சுவாசமாகும் பூக்கள்

தன்னை பாழாக்கி
உன்னை பொலிவாக்கும்
தியாகச் சின்னமான கைக்குட்டைகள்

படுக்கை அறை கட்டில்
குளியல் அறை சுவற்றில்
ஆளுயர கண்ணாடி
அலமாரியின் பிண்ணாடி
கதவின் மேலே
மேஜையின் கீழே நீ
ஒட்டிச் சென்ற பொட்டுகள் என

எல்லாம் எனக்காக
விட்டுச் சென்ற நிணைவுகள்

தனியே படுக்கையில்
கடமைக்கு உறங்கியவன், உன்
முகம் ஏந்தி முதுகு தாங்கி
விழி கோத்து விரல் பிடித்து
மடி சாய்ந்து மார்பு அணைந்து
கன்னம் இதழ் திருடி
காது மடல் வருடி
கூந்தல் எடுத்து அலசி
மூக்கும் மூக்கும் உரசி

உன்னோடு பகிர்ந்த தூக்கத்தில்
இரசனையோடு உறங்கினேன்

தனியாய் இருந்தபோதும் ஏகாந்தத்தில்
தணிந்திருந்தவன் இன்று
தாய்தந்தையோடு இருந்தும்
தனிமை உணர்கிறேன்

மல்லாந்து படுத்தால்
மார்மீது படருதடி உன் உருவம்

புரண்டு படுத்தால்
பின்னிருந்து பிணையுதடி உன் பிம்பம்

நேசம் கலந்த உன் சமையல்
நாட்டத்தோடு நீ பரிமாற
சுவையின் பக்குவம்
சற்று குறையகண்டும்
அன்போடு சமைத்து
அக்கறையோடு பறிமாறும்
அம்மாவின் பக்குவத்தில்
ஆர்வம் குறையுதடி

அமிர்தம் ருசித்தபின்னே
அறுசுவையில் விருப்பமில்லை
பெண்வாசம் பிடித்தபின்னே
பூவாசம் பிடிக்கவில்லை

பகிர்ந்து குடித்தபோது
பச்சைத்தண்ணீரிலும் புது சுவை
சலித்துவிட்ட பாடலும் உன்னோடு
சேர்ந்து ரசித்தபோது புது இசை

ஒரு வேலை உன்னை
நான் சந்திக்காமல் இருந்திருந்தால்
என் தேவைகள் எதுவென்று
நான் இழந்தவை என்னவென்று
தெரியாமலே வாழ்ந்திருப்பேன்

என் பிறப்பில் வந்த
ஆன்மை விழிக்க செய்யும் பெண்கள்
அனேகம் பேரை கடந்ததுண்டு,
என்னுள் ஒளிந்த
பெண்மை விழிக்க செய்த
பேரழகே உன்னை எப்படி துறக்க

இருபத்தி நான்கு நிமிடம்
இணைந்திருக்க , ஒரு ஜோடி முட்கள்
இருபத்தி நான்கு மணிகள் காத்திருப்பதுபோல்
இந்த முறை சேரத்தானா
இத்தனை நாள் காத்திருந்தோம்

தனியே முதன்முறை சந்திப்பதால்
பொங்கி வழியும் வெட்கத்தை
பொத்தி வைக்கும் குறுகுறுப்பில்
தத்தை நீ தத்தளிப்பாய்

மறுகும் ஆசை ஒரு பக்கம்
மறுதலிக்கும் நாணம் ஒரு பக்கம் என
தையல் உன்னை ஏந்த நான்
மையல் கொண்டு காத்திருக்க


அத்துமீற உரிமையிருந்தால் அருகில்
அன்பிற்குரியவன் மட்டுமிருக்கும்
சந்தர்ப சூழ்நிலை அமைந்தால்
சைவ மான் கூட
அசைவமாய் அசைபோடும் என
அனுபவித்து மகிழ்ந்தேன்

தனிமையில் இருப்பதால்
தட்டி கேட்க்க ஆளும்மில்லை
சுவருக்கும் சாளரத்திர்கும்
சாட்சி சொல்ல வாயும்மில்லை,
ஆதலால் மீனே
தூண்டிலை நீனே போட்டாயோ

சில்மிஷம் கண்டு
சிணுக்கம் கேட்டு
வெட்கம் கொண்ட
ஜண்ணல் ஒண்று திரை
சீலை கொண்டு நம்மை
மூடியதே அன்று

குளிரூட்டபட்ட அறையிலிருந்தும், மேனியெங்கும்
கொதி நீராவி பட்டதுபோல் கதகதப்பு
காது மடலில் வெப்பம் தொடங்கி
கபாலத்தில் அனல் அடிப்பதால்
காதல் தீ இதுதானா

என்னை அளித்து
உன்னை அடைந்ததில்
விரயமும் நலம்தானோ

தனியே அறைக்குள் அடைந்திருந்தும்
திருவிழாவில் நடைபோடும் பிள்ளையாய்
திகட்ட திகட்ட குதூகலித்தோம் அன்று


ஊரெங்கும் உற்சாகம்
உற்சவ கோலாகலம்
திருவிழாவில் தொலைந்த பிள்ளையாய்
திரு திருவென்று விழிக்கிறேன் நான் இன்று

தலையணை மந்திரம் ஓதும்
தாம்பத்ய வயதில் இருந்தபோதும்
தலையணை சண்டைபோடும்
தறிகெட்ட பிள்ளைகளான சமயம்
திரும்பவருமா அந்த காலம்

பற்க்களால் நகங்களால் ஊடலில்
பதித்து பிராண்டி விளையாடியதில்
அன்று காயங்களில் வலியில்லையடி
இன்று தழும்புகள் வலிக்குதடி

இடறிய காலால் ஆழாக்கு கவிழ கண்டு
சிதறிய நெல் உண்ண ஒடி வந்து வழி
தவறி தவிக்கும் கோழிக்குஞ்சைபோல் , உன்
நிணைவுகள் சிதறுகையில் என்
நிஜம் மறக்கின்றேனடி

இது வரை பல முறை தணிமையிலிருந்தபோது
இந்த அறையில் நடந்திருக்கிறேன்
இந்த படுக்கையில் புரண்டிருக்கிறேன்
இலையுதிர் காலம் கழிந்த வசந்தமாய் உன் வரவு
இன்று உன் நிணைவுகள் மட்டும் சுமக்கும்படியான பிரிவு
இமை மூடி எனக்குள் அழுகிறேன், முதன்முதலாய்
இப்போதுதான் தனிமையின் வலி உணர்கிறேன்
====================================================================
சிணுக்கம் = சினுங்கல்
மறுதலி = மாறுபடு
மறுகு = உடைபடும்
தணிந்து = சுகபடும்

7 comments:

lp said...

ithanai rasanai kandathillai naan!!
miga miga arputham!!

அமிர்தம் ருசித்தபின்னே
அறுசுவையில் விருப்பமில்லை
பெண்வாசம் பிடித்தபின்னே
பூவாசம் பிடிக்கவில்லை
intha naalu vari theme aa
evvlo azhaga virasam illama
solla mudiyumo, avvlo azhaga solli irukeenga!!
well done:))

செல்வேந்திரன் said...

Sooper Kaasiraja

அமிர்தம் ருசித்தபின்னே
அறுசுவையில் விருப்பமில்லை
பெண்வாசம் பிடித்தபின்னே
பூவாசம் பிடிக்கவில்லை

என் பிறப்பில் வந்த
ஆன்மை விழிக்க செய்யும் பெண்கள்
அனேகம் பேரை கடந்ததுண்டு,
என்னுள் ஒளிந்த
பெண்மை விழிக்க செய்த
பேரழகே உன்னை எப்படி துறக்க
these lines I liked very much.

Great going ;-)

Thanks LP for letting me know..

yazhini said...
This comment has been removed by a blog administrator.
yazhini said...

இன்று தழும்புகள் வலிக்குதடி..
very touching...

அகிலா said...

நான் ரசித்த வரிகள்:

//நீ வந்து போன பின்னே
என் வீட்டில் நானே
விருந்தாளியானேன்//

//இடறிய காலால் ஆழாக்கு கவிழ கண்டு
சிதறிய நெல் உண்ண ஒடி வந்து வழி
தவறி தவிக்கும் கோழிக்குஞ்சைபோல் , உன்
நிணைவுகள் சிதறுகையில் என்
நிஜம் மறக்கின்றேனடி//

நான் முன்னமே சொன்னது போல, காதல் சம்பந்தப்பட்ட கவிதை வரிகளின் மென்மையை விட சில கவிதைகளில் தெரியும் கோபத்தின் ஆழம் அதிகம்... இவ்விரண்டுமே ரசிக்கும் வகையில் இருப்பதால் எதுவாயினும் படிக்க‌ நான் த‌யார்

சில நாட்களாக இந்தப் பக்கம் வரவில்லை போல இருக்கிறது. உங்க‌ள் அடுத்த‌ க‌விதையைப் ப‌டிக்க‌ ஆவ‌லாய் நான்.

Nagaraj said...

kaasi, nice one da :-)

I suggest you try using Kural tamil or something like that. it will help you having exact tamil words and its easy for anyone to read. Search for Kural tamil and use it...

Shankar Karthik said...

erotic...romantic...great machi...seems u ppl are in deep love...:)