நெடு நாட்க்களுக்கு பிறகு சந்திக்கிறோம்;
நீண்ட மொனத்திற்க்கு பிறகு கேட்டாய்:
"நலமா" என்று ?
நாம் வாழ்ந்து அறியவேண்டிய நலத்தை
நீ என்னிடம் கேட்டு தெரியும்படி ஆனதேனடி?
இந்த மௌன இடைவெளியில், உன்
இதய வீட்டுக்குள் நுழைந்து,
வரவேற்பு அறையில்
என்னை தேடி பார்தேன்;
எங்குமே நானில்லை
ஒரு வேளை குப்பை தொட்டியா நான்
என்று எட்டி பார்ர்தேன் ,
அதுவும் நானில்லை;
வருத்ததுடன் கொல்லைக்கு வந்தேன்
ஒரத்தில் குப்பையாய் நான்!!!!
காதல் படகேறி ,
தனிமை கடல் கடக்க நினைத்தேன்;
வெறுமை சுழலில் என்னை சிக்க வைத்து,
கரையேறி நீ மட்டும் சென்றுவிட்டாய்.
பாதி ஆட்டத்தில் விலகுவோர்
தோற்றவர் ஆவர், இங்கே
விலகியது நீ
தோற்றது நான்.
வெள்ளத்தில் சிக்கி வீடும் போச்சு,
விற்பனைக்கு வைத்திருந்த நெல்லும் வீனாச்சு,
விதை நெல்லை விற்று
வயிற்று பசியாற்றும் விவசாயியிடம்,
விமானத்தில் பறந்து, சேதமறிந்து,
தொலைக்காட்சியின் மூலம் ஆறுதல் சொல்லும் அமைச்சர்போல்,
வெரிச்சோடிய என் வாழ்கையில்,
வெற்று வார்த்தையில் குசலம் கேட்டு,
வெந்த புண்ணில் ஏன் வேல் பாய்ச்சுகிறாய்.
அழைக்காமல் நுழைந்தாலும்,
தென்றலை யாரும் வெறுப்பதில்லை.
யார் வெறுத்தாலும்,
மரனம் விடுவதில்லை.
தென்றலாய் வந்தது காதல்,
மரணமாய் கொன்றது பிரிவு.
திரியில் இருந்த வரை
தீபமாய் ஒளிர்விட்ட சுடர்,
என்னை கிடங்கில் விழுந்துதது போல்
என் நிலைமை கவலைகிடமாகிவிட்டது.
மூளை தூங்கும்போதும் விழித்திருக்கும்
முதுகு தண்டுபோல்,
சிரித்தபடி இருந்தாலும் இதயத்தில்
வருத்தம் இருக்குதடி.
அமிர்தமாகிய உன் காதல்
தந்தது சாகாவரம்,
இதய கோப்பை நீ உடைத்துபோனதால்
சாக முடியமல் ஆறா ரனம்.
எதிர்படும் பெண்கள்
எதோ ஒரு அம்சத்தில்
உன்னை போல் இருக்க,
எப்படி பென்னே
உன்னை நான் மறக்க?
வேண்டாம் மனமே விட்டு விடு,
வேதாளம் போல் அவள் நினைவுகள்,
மீண்டும் தொலைவது,
மீன்டும் தொலைவது.
ஒட ஒட விரட்டியது வாழ்க்கை,
ஒளிந்திருந்த இடம் தேடிவந்து மிரட்டியது விதி,
எதிர் கொள்ள நெஞ்சு நிமிர்த்தி எழுந்தால்
என்னை துண்டாக்கி கொக்கரித்தது காலம்.
மெதுவாய் வில்லெடுத்து,
மெல்லமாய் நாண் இழுத்து,
நிதானமாய் அம்பு பூட்டி,
நெருடலின்றி என் நெஞ்சை தைத்து
ஊடுறுவியது உன் பிரிவு .
உன்மைக்காதல் என்பது
நெஞ்சை துளைக்குமென்று
நீ புரிந்துகொண்டது இப்படிதானா?
கல் ஒன்று எறிந்தேன்,
கனி ஒன்று விழுந்தது,
எரிந்த கல் என் காதல்,
விழுந்த கனி உன் இதயம்.
இன்னொருவன் அக் கனி எடுத்து போக
என்னொருவனிடம் எஞ்சியது கல் மட்டுமே.
தேர் விளக்கில் உன்னை வழியனுப்பி
தெரு விளக்கடியில் நிற்க்கிறேன்,
எண்ணையாய் என் உதிரம்,
திரியாய் நின் காதல்,
அன்பே நீ ஒளிர என்
அன்பை எரிக்க சொல்வதென்ன நியாயம்?
கூக்குரலிட்டது என் இதயம்:
சித்த பிரம்மை பள்ளத்தில்,
சிக்கி கொண்டு உழல்வதை யாரிடமாவது
கூப்பிட்டு பேச சொல்லியது.
சொல்லி தெரிவதா,
சொன்னாலும் புரிவதா என் வேதனை
தரையில் தவறி விழும் பூவுக்கு,
வலிக்கும் என்று எடுத்து,
தலையில் சூடிக்கொள்வாய்.
நொறுங்கி விழுந்த என்
உயிரின் விசும்பல் கேட்டாயா?
அஸ்தமன சூரியன் அழகுதான்,
இரவு பிறக்க காத்திருக்கும் அல்லிக்கு; ஆனால்
உதயத்தில் இருந்து,
உச்சி வெயில் கடந்து , பகல்
உய்யும் வரை தொடர்ந்த,
சூரியகாந்தியின் பரிவை, நீ
அறிந்தும் போனாயா ,
அறியாது போனாயா?
விதவிதமாய் விழுந்து விழுந்து,
விகட வித்தை காட்டுவான் கோமாளி.
வேடிக்கைகாக இல்லை அந்த முகமூடி,
வேதனை மறைக்கிறான் அவன் முகம் மூடி.
கோமகனாய் வாழ நினைத்த என்னை,
கோமாளி என்று என்னிவிட்டாயா?
பாழடைந்த என் இதயகோவிலில் ,
பழுதடைந்த உன் நினைவுகள்,
பெயர்ந்து தலைமேல் விழ,
செயலற்று போகிறேன் நான்.
பரபரவென்று சுழலும் என்னை
பதைபதைக்க செய்கிறது.
புறப்படுமிடம் புதிதாய் இருப்பினும்,
சேருமிடம் சரியாய் சென்றிடும்,
வண்டி மாட்டை போல
எங்கே தொடங்கினாலும்
உன்னில் முடியுதடி
என் நினைவுகள்.
இரை தேடி ஒடும் பல்லி
இடுக்கில் மாட்டி தவிப்பதுபோல்
உன் நினைவு சுகம் தேடி ஒடும் நான்
பிரிவின் வலியில் துடிக்கின்றேன்.
கசாப்பு கடையலிருந்து தப்பித்து ஒடுகையில்,
காருக்கு அடியில் சிக்கி நசுங்கிய,
ஆட்டுகுட்டியனது என் மனது;
உன் ஒரு நினைவிலிருந்து விலகி ஒடுகையில்,
மறு நினைவில் மாட்டி சாகிறது.
காதல் வைரம்போன்றது:
உறுதியனது ,உயர்வானது,
ஒளிவிசுவது, ஒளிந்திருபபது.
மேனியில் ஆபரணாமாய்
மின்னிட நான் ஆசைக்கொண்டேன், நீயோ
யாருக்கும் தெரியும்முன்னே,
யவ்வனம் தொலயும்முனே ,
விழுங்கிட சொன்னாய்.
உயர்ந்ததே ஆயினும்,
உனவாக கொண்டால்,
உயிர் குடிக்கும் வைரம் என்று
உனக்கு தெரியதா.
பொக்கிஷமாய் உன்னை
பொத்தி பொத்தி பாதுகாத்தவனின்
கடைசி ஆசை கூட கேட்காது போனாய்,அது சரி
காவு வாங்க பீடத்தில் நிற்கும் பூசாரி ,
ஆத்தாளின் அசிரிரிக்கு காத்திருப்பதில்லை,
ஆட்டுகிடாயின் சம்மதமும் கேட்பதில்லை.
விபத்தில் சிக்கியவன்
பிழைத்து விட்டால் சம்பவம்,
மரித்துவிட்டால் சவம்.
காதல் விபத்தில்
இருவரும் சிக்கியிருந்தோம்,
நீ பிழைத்துகொண்டதால் ,உனக்கு
நடந்து முடிந்த சம்பவம்.
நான் மரித்துவிட்டதால், இன்னும்
நடமாட மட்டும் முடிந்த சவம் ,அதனால்
பரிவாரம் இழந்த சதுரங்க ராஜாவாய்,
பதினாறு வாய்ப்புகள் பெற்று நடமாடுகிறேன்;
பந்தியில் அமர்ந்தும் ,
பறிமார ஆளின்றி,
பசியோடு கை கழுவுகிறேன்.
உனக்குள் தேடி
உன்னை கண்டபோது
முளைத்தது நட்பு,
உனக்குள் தேடி
என்னை கண்டபோது
விளைந்தது காதல்.
காதல் கொடிய வியாதியா பென்னே
என்னை பிரிந்ததை என்னி நீ குதூகலிக்க, உன்னை
காதலித்ததால் நான் தேசத்துரோகியா
எல்லைதாண்டி தலைமறைந்து வாழ
கதிரியக்கததால் நன்மையா தீமையா
ஆரய்ச்சி முடியும்முன்னே
அனு கழிவில் குளித்திட்ட மீனெல்லாம்
கருவாட்டிற்க்கு கூட உதவாது போனதுபோல்
ஏன் இந்த முரன்பாடு?
தோப்பாக முடியாது ஆலமரம்,
தோட்டத்திற்கு ஒவ்வாது அரசமரம்.
உன் நேசம் ஆலமரம்,
அது ஒற்றை மர தோப்பு;
உன் நினைவுகள் அரச மரம்,
அது பன்னோடு சேராத யாப்பு;
தருனம் இரண்டானாலும்,
தனிமை எனக்கு ஒன்றுதான்.
உன்னை பொறுத்தவரை ,இப்போதும்
உப்பை போன்றுதான் என் மீதான
உன் பிரியம் இருக்கிறது.
சோற்றில் அளந்த உப்பாய் அது
ருசித்தது ஒரு காலம்.
சமுத்திரத்தில் பூரணித்த உப்பாய்
உவர்பது நிகழ்காலம்.






