Wednesday, September 06, 2006

கும்பகோன தீக்கோள்

கலகலப்பான பிள்ளைகளை
கலயத்தில் அள்ளியது
கொடுமைக்கு புதிய உவமையானது
மறுநாள் பொழுது
மஞ்சத்தில் தொடந்கி
மயானத்தில் முடிந்திட
மழலை செல்வங்களே நீங்கள் செய்த
மண்ணிக்க முடியாத பாவம் என்ன

பிணம் தின்பாய்
பிண்டம் தின்பாய் ஈமத்தில்
பழம் தின்பாய்
பண்டம் தின்பாய் ஹோமத்தில்

எதை கொடுத்தாலும்
தின்று செரிக்கும் தீயே
பிள்ளை கணியமுதை
மென்று கொண்றபோது
உண்டது செரித்ததா உனக்கு

நீ பிணமாக்கியதோ சில பிஞ்சுகள்
நடை பிணமானதோ பல நெஞ்சுகள்

வேண்டாத இடங்களில் பெய்து
வெள்ளமாய் கரை புரளும் மழையே
கீற்று கொட்டகை நணையும்படி
சாரல் தந்திருந்தால் போதும்
தீயின் தனல் தனிந்திருக்கும்
தொன்னூறு பிள்ளையும் பிழைத்திருக்கும்
தீ கைவிட்டதுபோல்
நீயும் விட்டது ஏன்

தீங்கிழைத்தோரை விட்டுவிட்டு
தீங்கிழைக்கபட்டோரை தண்டிக்க
தீர்ப்பளித்த கடவுளே
ஏலமிடப்படும் தீர்ப்புகள்
எப்போது தொடங்கியது உன் வளாகத்தில்
பள்ளிகூட லாபத்தில் பங்கெடுத்தாயா
உண்டியல் காணிக்கைக்கு அடிமையானாயா

கோடிகள் பல வாங்கி ,திருப்பி
கொடுக்காது கம்பி நீட்டும்
அப்பாவிகளை மண்ணித்துவிட்டு
ஆயிரம் ரூபாய் கடனை
அடைக்ககூட வருமனமில்லாத
படுபாவிகளை தேடி பிடித்து வசூலிக்கும்
விதிமுறை மீறாத நேர்மை தவறாத
வங்கி மேளாளரின் நியாயத்தைபோல
சித்திரகுப்தனின் கணக்கில் இன்னும்
எத்தனை எத்தனை பிழைகள்

2 comments:

அகிலா said...

கோபம் சோகம் இரண்டும் இக்கவிதையில்....
யாரோ செய்த தவறுக்கு தண்டனைகள் யாருக்கு???

படைப்பாளிக்கே உரிய உணர்ச்சிகள் மேலோங்கிய படைப்பு இது...

இது போல இன்னும் பல சமுதாயத்தைப் பற்றின கவிதைகள் தர வேண்டுகிறேன்.

Unknown said...

"வேண்டாத இடங்களில் பெய்து
வெள்ளமாய் கரை புரளும் மழையே
கீற்று கொட்டகை நணையும்படி
சாரல் தந்திருந்தால் போதும்
தீயின் தனல் தனிந்திருக்கும்
தொன்னூறு பிள்ளையும் பிழைத்திருக்கும்"

"ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்"
.
இவ்விடயத்தில் எல்லா வாசல்களையும் மூடிவிட்டான்.

அருமையான படைப்பு கவிஞரே!!!