
ஆழிப் பேரலை வரலாறு மாற்ற வல்லது;
அகழ்வாராய்ச்சி நிரூபித்தது!
ஆழிப் பேரலை புவிவடிவை மாற்ற வல்லது;
அறிவியலாராய்ச்சி நிரூபித்தது!
அகழ்வாராய்ச்சி நிரூபித்தது!
ஆழிப் பேரலை புவிவடிவை மாற்ற வல்லது;
அறிவியலாராய்ச்சி நிரூபித்தது!
எதிர் பார்த்து வருவது இயற்கையில் மரணம்;
எதிர் பாராது வந்தது இயற்கையால் மரணம்!
கும்பகோணத் தீகோளிலும் குழந்தைகள்,
குஜராத் நிலக் கோளிலும் குழந்தைகள்,
கொந்தளித்த கடற்கோளிலும் குழந்தைகள்;
குழந்தைகள் மீதான உன் பிரியத்தை,
காண்பித்த முறை சரிதானா இறைவா?
கால் நனைத்து திரும்பி போகும் அலைகள்,
கால் பிடித்து இழுத்து போகும் என்று,
கபடமற்ற பிள்ளைகள் அய்யகோ அறியவில்லை!
பிள்ளைகள் மகிழ்ந்து குலாவும்போது
பொங்கி வந்த கடலே!
பிணத்தின் மீதிருந்த பணம்,நகை பிடுங்கபடும் போதும்,
பழுதடைந்த வீட்டிலிருந்த பொருட்கள் திருடப்படும் போதும்,
பொறுமை காத்தது முறையா?
நிரபராதியை கொல்வது சட்டப் பண்பில்லை;
நிராயுதபாணியை கொல்வது யுத்த பண்பில்லை;
நம்பியோரை கொல்வது நல்ல பண்பில்லை;
நீலக்கடலே நீ, நீளம் தாண்டியது
நயவஞ்சகமன்றி வேறில்லை!
என் வீட்டில் பிணம் விழுந்தால்
எதிர் வீட்டினர் ஆறுதல்;
எல்லோர் வீட்டிலும் எஞ்சியிருப்பது பிணமெனில்,
எவருக்கு எவர் ஆறுதல்?
அடையாளம் சொல்லக்கூட
ஆளில்லாத குடும்பத்தில்,
அளிக்கபடும் நிதியுதவி
அரசியலாக்கப் படுவது வேதனையா? வேடிக்கையா?
சமுதாய சீர்கேடும் கலாச்சார முறைகேடும்
சங்கமிக்கும் இடம் கடற்கரை என்பதால் -அலையே
கறை துடைக்க கரை வந்தாயோ?
களையான மனிதரை விழுங்குவதை விட்டு
கலையான பிள்ளைகளை தின்றுவிட்டு
கறையாகி போனாயே!
ஆயிரம் அணுகுண்டு வீச்சைவிட கொடியது
ஆழிப் பேரலையின் கோர தாண்டவமிது!
அழிவின்மூலம் வலிமை காட்டும் மனிதன்போல
ஆண்டவனும் மாறியது என்ன கொடுமையிது
1 comment:
//நீலக்கடலே நீ, நீளம் தாண்டியது
நயவஞ்சகமன்றி வேறில்லை! ///
உண்மை! கேட்பார் யாருமில்லை என்ற தைரியமா அதுக்கு??
//அளிக்கபடும் நிதியுதவி
அரசியலாக்கப் படுவது வேதனையா? வேடிக்கையா? //
வேதனையோ வேடிக்கையோ, நாமெல்லாம் கைக்கட்டிக் கொண்டு பார்த்துக்கொண்டு தானே போகிறோம். நாம் எப்போது இந்த அலை போல மேழெழும்பப் போகிறோம்.... முகத்தில் அறையும் நிதர்சனம் இது.
உங்கள் காதல் கவிதைகளை விட எனக்கு இந்த சமுதாய/மனித அக்கரையோடு எழுதியுள்ள கவிதைகள் பிடித்திருக்கின்றன. உங்கள் வரிகளில் ஒரு வேகத்தை பார்க்கிறேன் நான்.
உங்கள் பணி தொடரட்டும்.
Post a Comment