Thursday, March 01, 2007

எங்கே போகிறது என் தேசம்

http://www.expressindia.com/fullstory.php?newsid=14227
http://www.ts-adyar.org/magazine/wakeupindia/december_2002/editorial.htm

வலியனால் வறிஞனுக்கு வழுவென்றால்
தடுக்க முயலாத சட்டம்,
வறிஞனால் வலியனுக்கு பழுதென்றால்
ஒடுக்க பாயும் சட்டம்,

அரசியல் கயவர்களை
துளை வழியே, சாமர்த்யாமாய்
தப்பிக்க விட்டு விட்டு
காசுள்ள காதகர்கள்,
விலை பேசப்படும் சாட்சிகளால்
விடுதலையாக விட்டு விட்டு,

உணர்ச்சி கொந்தளிப்பில்,
உத்தேசமின்றி ஊழ்புரிந்த்தோரை
உற்சாகமாய் தண்டிப்பதனால்,
நீதியும் த‌ர்ம‌மும்
நீதிம‌ன்ற‌ங்க‌ள் மூல‌ம், கில‌மின்றி
நிலைநாட்டிய‌தாய் கொக்க‌ரிக்கும்.


வ‌டிவில் நேராயிருந்தும்,வாள் வீச்சு
இத‌ய‌த்தில் இட‌ம் பிடித்து கொல்லும்
வ‌ளைந்த‌ வ‌டிவிலிருன்ந்தும்,யாழ் வீச்சு
இத‌ய‌த்தில் இட‌ம் பிடித்து கொள்ளும்

ஏட்டு சாச‌ன‌த்திற்கு
நேர்மையாய் இருக்கும் நீதிக்க‌ண‌வான்க‌ளே,
ம‌னித‌த்திற்கு
வ‌ளைந்து கொடுத்தால், ச‌ட்ட‌த்தின்
புனிதத்திற்கு புரையேறுமா என்ன‌?

தீயால் வெந்த‌ நாவில்
தீய‌ம் சுவைக்க‌ வைத்தாலும்
தீச்சுவை தானே தெரியும்.

அரைய‌டிநில‌ம், ப‌ங்கில்
அதிக‌ம் பெற்ற‌தால்,
அண்ண‌ன் மீது, த‌ம்பி
வ‌ழ‌க்காடி ஜெயித்து, பின்
வ‌க்கீலின் க‌ட்ட‌ண‌த்தை, அந்நில‌ங்க‌ள்
விற்று விட்டு க‌ட்டுவானாம்.

கூடிபேசுகையில், தீர‌க்கூடிய விஷ‌ய‌ங்க‌ளை,
கூண்டில் ஏறி வாதிடும்போது
குர‌ங்கு கையில் அப்ப‌மாய்,
கொண்ட‌வனிட‌‌மும் நில்லாது
கேட்ட‌வ‌னுக்கும் இல்லாதுபோகும்

வாய்தா வாய்தா என‌
வ‌ழ‌க்குக‌ள் த‌ள்ளி போக‌,
வாதி, பிர‌திவாதி ப‌ல‌
ச‌ம‌ய‌ம் இற‌ந்தும் கூட‌,
வ‌க்கீலும் நீதிப‌தியும், சில‌
ச‌ம‌ய‌ம் ம‌ரித்தும் கூட‌,
வாழும் வ‌ழ‌க்குக‌ள் எத்த‌னை எத்த‌னை?

ம‌னித‌ம் மீது ந‌ம்பிக்கை குறைந்ததால்,நீதி
ம‌ன்ற‌ங்க‌ள் பிறந்ததோ?
ம‌கேச‌ன் மீது ந‌ம்பிக்கை குறைந்ததால்,
ம‌த‌ங்க‌ள் பிற‌ந்த‌தோ?

மூன்று நாளாய் ப‌ட்டினியிருப்ப‌வ‌ன்,
மூச்சு விட‌க்கூட‌ திர‌ண‌ற்ற‌வ‌ன்,
முக்திய‌டைய‌ச் சொல்லும்
பிர‌சார‌த்தை கேட்பானா?
முன்ன‌றையில் த‌யாராகும்
பிர‌சாத‌த்தை கேட்பானா?

ம‌த‌ம் ச‌ங்க‌ட‌மான‌ ச‌ம்பிர‌தாய‌மான‌தால்
ம்ந்திர‌ம்,மொழி வ‌ள‌ர்க்கும் ப‌யிர்ச்சியாச்சோ?
ச‌ன்மார்க‌ம், செல்வ‌ம் கொழிக்கும் வியாபார‌மான‌தால்
ப‌க்தி, ப‌கட்டால் ஈர்க்கும் நிறுவ‌ன‌மாச்சோ?
ஆதலால்
அண்டை ம‌னித‌ரின் துன்ப‌ம் தீர‌
ஆக்க‌ம் கூறிய‌ கால‌ம் ம‌லையேறி போச்சோ?

அண்ண‌ல் காந்தியும், காம‌ராஜ‌ரும்
அறிஞ‌ர் க‌லாமும், அம்பேத்க‌ரும்
அன்னை தெர‌சாவும்,பெச‌ண்டும்
அண்டிய‌ ம‌த‌த்தால்
அவ‌ர்க‌ள் உன்ன‌த‌ம் பெற‌வில்லை.

க‌ட‌வுள் பெய‌ரை சொல்லி
அங்கொருவ‌ன்
க‌ண்டை வேட்டி அப‌க‌ரித்தால்,
த‌லைவ‌ன் என‌க் கூறி
இன்னொருவ‌ன்
துண்டு கோவ‌ன‌ம் க‌ள‌வாடுவான்.

அடிப்ப‌டை வ‌ச‌திக‌ளான
ம‌ருத்துவ‌ம், க‌ல்வி
மின்சார‌ம், தண்ணீரை
த‌னியாருக்கு அர‌சாங்க‌ம்
தாரை வார்த்திட்டு,
ம‌துவ‌கை கொள்முத‌லுக்கு
மாநில‌ம் முழுதும் க‌டைதிற‌க்கும்,
மாபெரும் தொண்டுடக்கு, மேடையில்
மார்த‌ட்டி கொள்ளும்.

குடித்து குட‌ல் வேக‌ ஒருவ‌ன்
கொடுக்கும் காசில்தான். அவ‌ன்
க‌ட்டை வேகும் இட‌த்திற்கே
க‌ட்டிட‌ம் க‌ட்டி கொடுக்கும்.

அரிசியும் அடுப்பும்
இல‌வ‌ச‌மாய் கொடுத்துவிட்டு,
அர‌சாங்க‌ம்
இர‌ண்டு ரூபாய் கொடுத்தே
பொதுக்க‌ழிப்பிறை ப‌ய‌ன்ப‌டுத்த‌ சொல்லும்.

மூன்று நாளுக்கொருமுறை,
மின்விள‌க்கெரியும் ஊரில்,
இல‌வ‌ச‌மாய் தொலைக்காட்சி பெட்டி த‌ந்து
இர‌ண்டு ம‌ட‌ங்காய், மின் க‌ட்ட‌ண‌ம் வ‌சூலிக்கும்.

தெரிந்து புரிந்த‌வ‌ன் வ‌ருந்த‌வேண்டும்,
தெரியாது புரிந்த‌வ‌ன் திருந்த‌வேண்டும் என‌
சமூக‌ம்விட்டு த‌னிமை ப‌டுத்த‌ப‌ட்டு
சிறையில் அடைக்க‌ப‌டும் கைதிக‌ளுக்கு,
ஆட்சிக‌ள் மாறும்போது
அர‌சிய‌ல்வாதியும், அதிகாரியும்
அடைக்க‌ப‌டும் விடுதியாவ‌தால், சிறைச்சாலையில்
அதிநவீன‌ வ‌ச‌திக‌யும்
அருசுவை உணவுமி ருக்கும்.

ஆதி திராவிட‌ மாண‌வ‌ர் விடுதியிலோ
அர‌வ‌மும், தேளும் ந‌ட‌மாடும்.
ஏழை மாண‌வ‌ரின் ம‌திய‌ உண‌வில்
எலியும், ப‌ல்லியும், ஊறி உயிர்விடும்.

ர‌ம்மிமான‌ சூழ‌லில் அமைந்து, வ‌ச‌திக‌ள்
ர‌சித்து வாழும் சுத‌ந்திர‌மான‌ சிறைக‌ளால்,
கூடாது குற்ற‌ங்க‌ள் என்ற‌
சாமான்ய‌ ம‌க்க‌ளின் எண்ண‌ம்
கூடாது குறையாதா?

Thursday, November 09, 2006

என் வீட்டில் நீ



புத்தர் அமர்ந்து ஞானம் பெற்றதால்
புனிதம் அடைந்த போதி மரம்போல், நீ
தங்கி சென்ற பின்னே , என் இல்லம்
தீட்சை பெற்றது பெண்ணே

எதிர்புறம் பின்புறம்
இடபுறம் வலபுறம்
மேல்புறம் கீழ்புறம்
எப்புறம் திரும்பினாலும்,
அருகில் நீ இருந்தவரை என்
அரண்மனை முழுதும்
அந்தபுரமானதே தோழி

எந்த பக்கம் திரும்பினாலும்
என் வீட்டில் இப்போது
எஞ்சியிருப்பது யாவும்
வஞ்சி உன் பதிவுகள்

நீ வந்து போன பின்னே
என் வீட்டில் நானே
விருந்தாளியானேன்

வண்டை தேடி வந்த
வாச மலர் செண்டே

என் தலையனையில் ஒளிந்த
உன் தலை மயிர் இழைகள்

வாடிபோனதால் நீ
வீசி எறிந்தது என்
கவிகளுக்கு சுவாசமாகும் பூக்கள்

தன்னை பாழாக்கி
உன்னை பொலிவாக்கும்
தியாகச் சின்னமான கைக்குட்டைகள்

படுக்கை அறை கட்டில்
குளியல் அறை சுவற்றில்
ஆளுயர கண்ணாடி
அலமாரியின் பிண்ணாடி
கதவின் மேலே
மேஜையின் கீழே நீ
ஒட்டிச் சென்ற பொட்டுகள் என

எல்லாம் எனக்காக
விட்டுச் சென்ற நிணைவுகள்

தனியே படுக்கையில்
கடமைக்கு உறங்கியவன், உன்
முகம் ஏந்தி முதுகு தாங்கி
விழி கோத்து விரல் பிடித்து
மடி சாய்ந்து மார்பு அணைந்து
கன்னம் இதழ் திருடி
காது மடல் வருடி
கூந்தல் எடுத்து அலசி
மூக்கும் மூக்கும் உரசி

உன்னோடு பகிர்ந்த தூக்கத்தில்
இரசனையோடு உறங்கினேன்

தனியாய் இருந்தபோதும் ஏகாந்தத்தில்
தணிந்திருந்தவன் இன்று
தாய்தந்தையோடு இருந்தும்
தனிமை உணர்கிறேன்

மல்லாந்து படுத்தால்
மார்மீது படருதடி உன் உருவம்

புரண்டு படுத்தால்
பின்னிருந்து பிணையுதடி உன் பிம்பம்

நேசம் கலந்த உன் சமையல்
நாட்டத்தோடு நீ பரிமாற
சுவையின் பக்குவம்
சற்று குறையகண்டும்
அன்போடு சமைத்து
அக்கறையோடு பறிமாறும்
அம்மாவின் பக்குவத்தில்
ஆர்வம் குறையுதடி

அமிர்தம் ருசித்தபின்னே
அறுசுவையில் விருப்பமில்லை
பெண்வாசம் பிடித்தபின்னே
பூவாசம் பிடிக்கவில்லை

பகிர்ந்து குடித்தபோது
பச்சைத்தண்ணீரிலும் புது சுவை
சலித்துவிட்ட பாடலும் உன்னோடு
சேர்ந்து ரசித்தபோது புது இசை

ஒரு வேலை உன்னை
நான் சந்திக்காமல் இருந்திருந்தால்
என் தேவைகள் எதுவென்று
நான் இழந்தவை என்னவென்று
தெரியாமலே வாழ்ந்திருப்பேன்

என் பிறப்பில் வந்த
ஆன்மை விழிக்க செய்யும் பெண்கள்
அனேகம் பேரை கடந்ததுண்டு,
என்னுள் ஒளிந்த
பெண்மை விழிக்க செய்த
பேரழகே உன்னை எப்படி துறக்க

இருபத்தி நான்கு நிமிடம்
இணைந்திருக்க , ஒரு ஜோடி முட்கள்
இருபத்தி நான்கு மணிகள் காத்திருப்பதுபோல்
இந்த முறை சேரத்தானா
இத்தனை நாள் காத்திருந்தோம்

தனியே முதன்முறை சந்திப்பதால்
பொங்கி வழியும் வெட்கத்தை
பொத்தி வைக்கும் குறுகுறுப்பில்
தத்தை நீ தத்தளிப்பாய்

மறுகும் ஆசை ஒரு பக்கம்
மறுதலிக்கும் நாணம் ஒரு பக்கம் என
தையல் உன்னை ஏந்த நான்
மையல் கொண்டு காத்திருக்க


அத்துமீற உரிமையிருந்தால் அருகில்
அன்பிற்குரியவன் மட்டுமிருக்கும்
சந்தர்ப சூழ்நிலை அமைந்தால்
சைவ மான் கூட
அசைவமாய் அசைபோடும் என
அனுபவித்து மகிழ்ந்தேன்

தனிமையில் இருப்பதால்
தட்டி கேட்க்க ஆளும்மில்லை
சுவருக்கும் சாளரத்திர்கும்
சாட்சி சொல்ல வாயும்மில்லை,
ஆதலால் மீனே
தூண்டிலை நீனே போட்டாயோ

சில்மிஷம் கண்டு
சிணுக்கம் கேட்டு
வெட்கம் கொண்ட
ஜண்ணல் ஒண்று திரை
சீலை கொண்டு நம்மை
மூடியதே அன்று

குளிரூட்டபட்ட அறையிலிருந்தும், மேனியெங்கும்
கொதி நீராவி பட்டதுபோல் கதகதப்பு
காது மடலில் வெப்பம் தொடங்கி
கபாலத்தில் அனல் அடிப்பதால்
காதல் தீ இதுதானா

என்னை அளித்து
உன்னை அடைந்ததில்
விரயமும் நலம்தானோ

தனியே அறைக்குள் அடைந்திருந்தும்
திருவிழாவில் நடைபோடும் பிள்ளையாய்
திகட்ட திகட்ட குதூகலித்தோம் அன்று


ஊரெங்கும் உற்சாகம்
உற்சவ கோலாகலம்
திருவிழாவில் தொலைந்த பிள்ளையாய்
திரு திருவென்று விழிக்கிறேன் நான் இன்று

தலையணை மந்திரம் ஓதும்
தாம்பத்ய வயதில் இருந்தபோதும்
தலையணை சண்டைபோடும்
தறிகெட்ட பிள்ளைகளான சமயம்
திரும்பவருமா அந்த காலம்

பற்க்களால் நகங்களால் ஊடலில்
பதித்து பிராண்டி விளையாடியதில்
அன்று காயங்களில் வலியில்லையடி
இன்று தழும்புகள் வலிக்குதடி

இடறிய காலால் ஆழாக்கு கவிழ கண்டு
சிதறிய நெல் உண்ண ஒடி வந்து வழி
தவறி தவிக்கும் கோழிக்குஞ்சைபோல் , உன்
நிணைவுகள் சிதறுகையில் என்
நிஜம் மறக்கின்றேனடி

இது வரை பல முறை தணிமையிலிருந்தபோது
இந்த அறையில் நடந்திருக்கிறேன்
இந்த படுக்கையில் புரண்டிருக்கிறேன்
இலையுதிர் காலம் கழிந்த வசந்தமாய் உன் வரவு
இன்று உன் நிணைவுகள் மட்டும் சுமக்கும்படியான பிரிவு
இமை மூடி எனக்குள் அழுகிறேன், முதன்முதலாய்
இப்போதுதான் தனிமையின் வலி உணர்கிறேன்
====================================================================
சிணுக்கம் = சினுங்கல்
மறுதலி = மாறுபடு
மறுகு = உடைபடும்
தணிந்து = சுகபடும்

Thursday, September 14, 2006

மருதக்காதல் மறந்ததேனோ


வெற்று பாத்திரம்
சுமக்கும் அடுப்பில்
சமைக்க எதுவுமின்றி
அழற்றும்* நெருப்பைபோல் ,என்
மாழைத்* தீ
பாழாய் புகையுதே

சமைத்து பறிமாற
அன்பே நீயின்றி, எதை
சுவைத்து பசியாறும்
என் இளமை நோன்பின்றி

இரவு குளிர்கையில்
இங்கே ஒருவன்
போர்வையின் வெப்பம்
போதாமல் போராடுகிறேன்
மணாளனின் துணையோடு
மஞ்சத்தில் தீக்குளிக்கிறாய் நீ

காணிக்கை பாதுகாப்பது உண்டியலாயினும்
கடைசியில் சேருவதோ பூசாரியிடம்
உன் காதலை சுமந்த
என் உள்ளம் உண்டியலானதே தோழி

கூண்டை விட்டு
கொஞ்ச நேரம் விடுதலை
கொத்தி சீட்டெடுதால்
பசியார நெல்மணி
கிடைக்கும் என்ற அனுதாபத்தில்
கிளி ஜோசியம் பார்ப்பவர்போல
நீயாய் தந்தது அனுதாபமா
நானாய் புரிந்தது காதலா

பசிக்கு கொரிக்க பலகாரம்
பாகனுக்கு கையில் வருமானம்
கிடைக்கும் என்ற பச்சாதாபத்தில்
கோயில் யாணையிடம் ஆசி பெறுவோர்போல்
நீயாய் தந்தது பச்சாதாபமா
நானாய் புரிந்தது காதலா

கூழான சோறு காக்கைக்கு
பாழான சோறு பசுவிற்கு
பரிதாபத்தில் உணவிடுவோர்போல்
நீயாய் தந்தது பரிதாபமா
நானாய் புரிந்தது காதலா

இவை போலதானா
இனியவளே என்னை காதல் செய்தாய்
குழலாக உன்
இதழ் சேர
ஏங்கி இருந்த
மூங்கில் குருத்தை
அடுப்பூததானா
அன்பே அன்பே நீ உடைத்தாய்

தூசி படர்ந்த வீணையின்
துரு பிடித்த தந்திகளை
துடைக்கையில் எழும் அபஸ்வரமாய்
தூண்டபட்டது என் காதல் என நினைத்தாயோ இல்லை

தணித்து இசைக்க முடியாத
தம்புரா என் காதல் என்றென்னி
தள்ளி வைத்து வேறு
திருமனம் செய்து தாம்பத்ய
தவில் வாசிக்க சென்றாயோ

நுழைகையில் கேட்காமல் வந்தாய் பின்
பிரிகையில் மட்டும் ஏனடி கேட்டாய்
அனுதாபம் கொண்டாயா அல்லது
ஆழம் பார்த்தாயா
=====================================================================
*அழற்றும் - எரியும்
*மாழை - இளமை

Wednesday, September 06, 2006

கும்பகோன தீக்கோள்

கலகலப்பான பிள்ளைகளை
கலயத்தில் அள்ளியது
கொடுமைக்கு புதிய உவமையானது
மறுநாள் பொழுது
மஞ்சத்தில் தொடந்கி
மயானத்தில் முடிந்திட
மழலை செல்வங்களே நீங்கள் செய்த
மண்ணிக்க முடியாத பாவம் என்ன

பிணம் தின்பாய்
பிண்டம் தின்பாய் ஈமத்தில்
பழம் தின்பாய்
பண்டம் தின்பாய் ஹோமத்தில்

எதை கொடுத்தாலும்
தின்று செரிக்கும் தீயே
பிள்ளை கணியமுதை
மென்று கொண்றபோது
உண்டது செரித்ததா உனக்கு

நீ பிணமாக்கியதோ சில பிஞ்சுகள்
நடை பிணமானதோ பல நெஞ்சுகள்

வேண்டாத இடங்களில் பெய்து
வெள்ளமாய் கரை புரளும் மழையே
கீற்று கொட்டகை நணையும்படி
சாரல் தந்திருந்தால் போதும்
தீயின் தனல் தனிந்திருக்கும்
தொன்னூறு பிள்ளையும் பிழைத்திருக்கும்
தீ கைவிட்டதுபோல்
நீயும் விட்டது ஏன்

தீங்கிழைத்தோரை விட்டுவிட்டு
தீங்கிழைக்கபட்டோரை தண்டிக்க
தீர்ப்பளித்த கடவுளே
ஏலமிடப்படும் தீர்ப்புகள்
எப்போது தொடங்கியது உன் வளாகத்தில்
பள்ளிகூட லாபத்தில் பங்கெடுத்தாயா
உண்டியல் காணிக்கைக்கு அடிமையானாயா

கோடிகள் பல வாங்கி ,திருப்பி
கொடுக்காது கம்பி நீட்டும்
அப்பாவிகளை மண்ணித்துவிட்டு
ஆயிரம் ரூபாய் கடனை
அடைக்ககூட வருமனமில்லாத
படுபாவிகளை தேடி பிடித்து வசூலிக்கும்
விதிமுறை மீறாத நேர்மை தவறாத
வங்கி மேளாளரின் நியாயத்தைபோல
சித்திரகுப்தனின் கணக்கில் இன்னும்
எத்தனை எத்தனை பிழைகள்

Tuesday, September 05, 2006

பிரிவின் வலி


காற்று வாங்கத்தான்
கடலோரம் நடந்தேன்
இளைப்பார எண்ணித்தான்
ஈர மண்ணை மிதித்தேன்
எடுத்த காலடி
எழும் முன்னே, அலையே
இட்ட அடியை ஏன்
இழுத்து போனாய்

பாதையில் கிடக்கும் ரோஜா
பாதததில் மிதிப்பட்டால்
பாழ்பட்டு கூழாகும் என்று
பக்குவமாய் எடுத்தேன்
ஏன் முள்ளே நீ
என் விரல் கிழித்தாய்

காயபட்ட என் நெஞ்சம், உன்
கண்பட்டே தேறிவரும்போது
கைபட்டால் ஆறிடாதோ என்றே
விடியலில் எழுப்பிட
உன் ஸ்பரிசத்திற்காக காத்திருந்தேன், சூரிய
வெளிச்சத்தை மட்டுமே நீ
எனக்காக விட்டுப்போனாய்

மறைத்து வைத்த உன் நிணைவுகளை
மறக்கசெய்ய வேண்டும் என
மன்றாடினேன் இறைவனிடம்

பட்டியல் ஒன்று கொடுத்தால்
ப்ரிசீலித்து முடிவெடுப்பதாய் சொன்னார்

முடிந்தவரை எழுதி பார்த்தும்
முடியவில்லை இந்த பட்டியல்
எழுதியதை சரி பார்க்க
ஏட்டை புரட்டியபோது உரைத்தது
உன் நிணைவுகளயும் அகற்றிவிட்டால், நான்
உயிர் வாழ்வதெவ்வாறு

கோடைக்கால பகல்பொழுதில்
கொளுத்தும் சூரியானான உன் பிரிவு, அதை
மறக்க நிணைத்து நான்
மதி இழந்துதான்
தனல் கக்கும் எரிமலைக்குள்
தலை கொடுத்ததுபோல் ஒரு உணர்வு, அய்யகோ
பிரிந்த வலியைவிட உன்னை
மறக்கும் வலி கொடியதடி,ஆதலால்
சிதைந்துபோன பின்னும்
சரித்திரம் சுமக்கும் பாலமாய் , நான்
சுமக்கிறேன் உன நிணைவுகளை

ஆழிப் பேரலை


ஆழிப் பேரலை வரலாறு மாற்ற வல்லது;
அகழ்வாராய்ச்சி நிரூபித்தது!
ஆழிப் பேரலை புவிவடிவை மாற்ற வல்லது;
அறிவியலாராய்ச்சி நிரூபித்தது!

எதிர் பார்த்து வருவது இயற்கையில் மரணம்;
எதிர் பாராது வந்தது இயற்கையால் மரணம்!

கும்பகோணத் தீகோளிலும் குழந்தைகள்,
குஜராத் நிலக் கோளிலும் குழந்தைகள்,
கொந்தளித்த கடற்கோளிலும் குழந்தைகள்;
குழந்தைகள் மீதான உன் பிரியத்தை,
காண்பித்த முறை சரிதானா இறைவா?

கால் நனைத்து திரும்பி போகும் அலைகள்,
கால் பிடித்து இழுத்து போகும் என்று,
கபடமற்ற பிள்ளைகள் அய்யகோ அறியவில்லை!

பிள்ளைகள் மகிழ்ந்து குலாவும்போது
பொங்கி வந்த கடலே!
பிணத்தின் மீதிருந்த பணம்,நகை பிடுங்கபடும் போதும்,
பழுதடைந்த வீட்டிலிருந்த பொருட்கள் திருடப்படும் போதும்,
பொறுமை காத்தது முறையா?

நிரபராதியை கொல்வது சட்டப் பண்பில்லை;
நிராயுதபாணியை கொல்வது யுத்த பண்பில்லை;
நம்பியோரை கொல்வது நல்ல பண்பில்லை;
நீலக்கடலே நீ, நீளம் தாண்டியது
நயவஞ்சகமன்றி வேறில்லை!

என் வீட்டில் பிணம் விழுந்தால்
எதிர் வீட்டினர் ஆறுதல்;
எல்லோர் வீட்டிலும் எஞ்சியிருப்பது பிணமெனில்,
எவருக்கு எவர் ஆறுதல்?

அடையாளம் சொல்லக்கூட
ஆளில்லாத குடும்பத்தில்,
அளிக்கபடும் நிதியுதவி
அரசியலாக்கப் படுவது வேதனையா? வேடிக்கையா?

சமுதாய சீர்கேடும் கலாச்சார முறைகேடும்
சங்கமிக்கும் இடம் கடற்கரை என்பதால் -அலையே
கறை துடைக்க கரை வந்தாயோ?
களையான மனிதரை விழுங்குவதை விட்டு
கலையான பிள்ளைகளை தின்றுவிட்டு
கறையாகி போனாயே!

ஆயிரம் அணுகுண்டு வீச்சைவிட கொடியது
ஆழிப் பேரலையின் கோர தாண்டவமிது!
அழிவின்மூலம் வலிமை காட்டும் மனிதன்போல
ஆண்டவனும் மாறியது என்ன கொடுமையிது

உயரே பறக்கும் காற்றாடி

மரணமொரு விந்தை;
மரணத்தை எல்லோரும்
ஏதோவொரு கணத்தில் சந்தித்திருப்போம்!
இதுதான் மரணமென்று உணருமுன்னே
கடந்து சென்றிருக்கும் அல்லது காவு கொண்டிருக்கும்!

மரணத்தின் வாசல் சென்று மீண்டவர் சொல்வார்;
"உயிரென்பது உயரே பறக்கும் காற்றாடி;
நூலவிழும் நாளதனை கணித்திடவே முடியாது!
மரணத்தை கண்டோருண்டு; வென்றாரில்லை!"

உடலின் மீதிருக்கும் மண்ணும்
உடலி னுள்ளிருக்கு முயிரும்
உதிரும் நேரம்வந்த போதில்
ஒட்டி யிருக்கப்போவ தில்லை!

ஒவ்வொரு கடையாயோடி அலையும் நாய்
ஒன்றுமே வாங்காதது போல்
ஒவ்வொரு கல்லறையாய் கவ்வியிழுத்தும்
ஒன்றுமே தேறாதது போல்
எங்கெங்கோ சுற்றிவந்து
எதையெதையோ சேர்த்துவைத்து
என்ன கொண்டு போகிறோம்
எழுந்து போகையில்;
எண்சாண் உடம்பில்
எச்சிலும் எலும்பும்
ஏழாயிரம் நோயுந் தவிர!

காத்திடவும் வகையறியாமல்
கைவிடவும் முடியாமல்
கவர்பிளந்த மரத்துளையில் இடையினிலே
காலிடுக்கிஅகப்பட்ட பின்னே
காலகற்ற வழியற்ற
ஆப்பதனை அசைத்திடும்
ஆவேசக் குரங்கனைய
அல்லலது கொண்டிடுவோம் கால மெல்லாம்!

செத்தபின்னே மெய்கூட
சொந்தமென எடுத்துச்செல்லவழி யில்லா
இறந்த காலத்தைப் பேசிப்பேசி
இன்றைய பொழுதைக் கழித்துவிட்டு
நாளைய இருளுக்கு பயந்து
நடக்கும் வாழ்வில் ஒளியேற்ற மறந்து
வேப்பெண்ணையிலூறிய
வெள்ளைச் சர்க்கரைபோல்
சுவையினை உமிழ்ந்துவிட்டு
சக்கையாய் சாகின்றோம்

இந்த நேரத்தில்
இந்த மரத்திலிருந்து
எத்தனை இலைகள்
எப்படி உதிருமென
எல்லாம் வல்ல இறைவன் கட்டளை; இதில்
அடுத்தவர் பார்வைக்காய்
அரிதாரம் பூசி பூசி
அசல்முகம் தொலைக் கின்றோம்;
ஆகையினால்
அவரவர் தேவைக்கு மீறியே சேர்க்காது
அடுத்தவரின் கையிருப்பை
அனுமதியின்றி புணராது
இயல்பாய் இருப்பதே இனிமை!

Thursday, August 31, 2006

தொலைந்துபோனவன்


தெருவில் இறங்கி நடக்கையில்
தெருகோடியை பார்க்கிறேன்
நீ இருந்தாய் என்ற பழமையும்
நீ இல்லை என்ற வெறுமையும்
ஆறிவறும் காயத்தில் நகம்
கீறியதுபோல் துடித்தேன்

இடி ஓசைக்கு பயந்து உன்
மடி தேடியவன் நான், என்னை
பொடியாகி போவாய் என
முன்பே சபித்திருந்தால் உன்
மடியோடு மரித்திருப்பேன்

தலைவியினை அணைத்து புரளும் வயதில்
தலையணை அணைத்து புலம்புகிறேன்
உன்னோடு போக வேண்டிய இடத்திற்கெல்லாம்
என்னை தனியாக போகும்படி செய்தது சரியா

நீரை தொலைத்த நதியாய்
நீண்ட என் கரைகள்
காய்ந்த நதியின் மடியில்
காலாற நடந்தவர் கூறினர்
"எவ்வளவு பரந்த மணல்வெளி " என்று
அத்தனை நாள் ஓடியபடி
அங்கு வாழ்ந்த ஜீவநதியின்
ஆயுள் முடிந்துபோனதை
அறிவாறோ யாரேனும்

தொலையும்வரை அதன் அருமை தெரியாது
தொலைத்த உன்னை மீட்க வழியும் கிடையாது
தொலைந்துபோனது போகட்டும் பெண்ணே
தொலைத்தவன் கேட்கிறேன் சொல் கண்ணே, நாண்
தொலைத்தது உன்னையா என்னையா

தொலைத்திட்ட உன் சுயத்தை
தேடி கொடுத்தவன் நாண்
மறந்திட்ட உன் வெட்கத்தை
மீட்டு எடுத்தவன் நாண்
உன்னை உனக்கு அன்று
உணர்த்திய நாண்
என்னை எனக்கே இன்று
எதிரியாய் உணர்கிறேன்

Thursday, August 10, 2006

மலரினும் மெல்லியது....


பூத்து குலுங்கிய பூக்களால்
பொங்கி ததும்பிய ஒரு கொடி
எக்கி பறித்தாய் நீ சில பூக்கள் - உனக்கு
எட்டாத உயரத்தில் பல பூக்கள்

சீண்டாது நீ போனபின்
துயரத்தில் விழுந்த அப்பூக்கள்
உயரத்திலிருந்து விழுந்து
மாண்டன தற்கொலை செய்து

இத்தனை மெல்லியதா பூக்கள் என
இறந்த பூக்களிலிருந்து
இரண்டொன்றை சேமிதேன்

குளித்த தலை, வாசலில்
துவட்டி கொண்டிருகிறாய் நீ
பூவையின் வாசத்தை
பூவின் வாசமாய் எண்ணி
வட்டமிட்டன உன்னை சுற்றி
வண்ணத்து பூச்சிகள்

ஒவ்வொரு பூவிலும்
ஒன்றே வாசம்
பூவையே உன்னில் எப்படி,
பல பூவின் வாசம் இப்படி, என
எனக்கே இன்னும் புலபடாதபோது
ஏமாந்துபோனது வண்ணத்துபூச்சிகள்
என்பதில் வியப்பேது?

அசைந்த பட்டாம்பூச்சியின்
அதிர்வினால் உடைந்த கூந்தல் கண்டு
அதிசயித்தேன்
பூவை விட மெல்லியவளா! இந்த
பூவை என்ன தேவதைக்கு பிறந்தவளா!

அடிக்கடி மன்ணில் பிறக்குமாம் தேவதைகள்;
அப்படி பிறந்தவள்தான நீயும்!

எண்ணிப் பார்தேன் வானில்
ஏதோ ஒரு நட்ச்சத்திரம் குறையக் கண்டேன்;
எங்கே அது என்று தேடியபோது
என் கண்ணில் உன்னை கண்டேன்

மண்ணில் விழும் நட்ச்சத்திரமெல்லாம்
மண்ணாகிவிடும் எண்றே படித்திருந்தேன்
மண்ணில் விழுந்த நட்ச்சத்திரமொன்று
பெண்ணானதோ என உனைக்கண்டு வியந்தேன்

ஒவ்வொரு பூவிடமும் வினவினேன்;
உலகின் மென்மையான பூவை அறிவீரா என்று;
ஒவ்வொரு பூவும் பொய்யே உரைத்தது;
அதுவே மென்மையான பூவென்று!
உன் பட்டு கரம் பற்றி ஏறியும்,
உன் கூந்தல் சரம் தொற்றி ஏறியும்,
இவளின் மென்மை பற்றி பேசவில்லை;
இந்த நயவஞ்சக பூக்கள்!

தேவதைகள் இருக்குமிடம்
தென்றல் சுற்றிவருமாம்
சில நாட்களாய் இங்கே
சில்லென்ற காற்று இல்லை

காற்றை அழைத்து
காரணம் கேட்டேன்;
தேவதை ஒருத்தியின் விலாசத்தை,
தொலைத்திட்டதாய் காற்று அழுதது!

அன்பே உன் விலாசம் தந்து
ஆறுதலாய் நல்வார்த்தை சொல்லி
அனுப்பி வைத்தேன் உன்வசம்

நான் அனுப்பிய தென்றல்
நலம் விசாரிக்குதா தினம் உன்னை?

மென்மை என்பதின் அர்த்தமானவளா , சகியே நீ;
மென்மைக்கு உவமையானவளா!

மூச்சுபட்டால் வாடும் தொட்டாச்சிணுங்கி நீ;
முகரபட்டால் வாடும் அனிச்ச மலர் நீ;
மென்மை உனக்கு வரமா வருத்தமா?